சனி, ஜூலை 11, 2020

FETNA கவியரங்கம்



வட  அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 33வது ஆண்டு விழா அட்லாண்டா, ஜார்ஜியா-வில் ஜூலை 3,4,5 ஆம் தேதிகளில் நடப்பதாக இருந்தது. எனினும் கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி இணைய வழியில் நடத்தப்பட்டது.

தமிழ், தமிழர் நலம், தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், அதை களைய நாம் ஆற்ற வேண்டிய பணிகள், கிராமிய பாடல், மெல்லிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம், தொழில் முனைவோர் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறியது. 

நிகழ்ச்சி நிரலை https://fetnaconvention.org/ என்ற தளத்தில் கண்டு களிக்கலாம்.  
இந்த நிகழ்வில் முதல் முதலாக நான் கவியரங்கத்தில் பங்கேற்றேன். நடுவர் கவிக்கோ. திரு ஞானச்செல்வன் அவர்கள் தலைமையில் நடந்த கவியரங்க விழா மற்றும் விழாவின் அனைத்து நிகழ்வுகளும் முகநூல் மற்றும் Youtube-இல்  நேரலையாக ஒளிபரப்ப பட்டது. 

கீழே கொடுக்கப்பட்ட Youtube  இணைப்பில் கவியரங்கம் 1:06:36 என்ற மணித்துளியில் இருந்து ஆரம்பிக்கிறது. என்னுடைய கவிப் பேச்சு 1:53:00 என்ற மணித்துளி அளவில் தொடங்குகிறது. 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக