வெள்ளி, மார்ச் 26, 2021

மருத்துவர் அம்பிகாதேவி நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்

 முன்னதாக வல்லின சிறகுகள் இதழ் மருத்துவர் அம்பிகா தேவி அவர்கள் நினைவாக உலகவளாவிய கவிதை நூல் போட்டி ஒன்றை நடத்தினார்கள்.  இதைப்  பற்றி என்னுடைய வலைத்தளத்தில் முன்பே எழுதி இருந்தேன். இணைப்பு கீழே.



தற்சமயம் அந்த போட்டிக்கான முடிவுகளை அறிவித்துள்ளார்கள். என்னுடைய கவிதை தொகுப்பும் நூலாக்கம் பெறும் தொகுப்பாக தேர்வு செய்யப் பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி. வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் கீழே.



அமரர் மரு. ஜெ.அம்பிகாதேவி நினைவு உலகளாவிய கவிதை நூல் போட்டி முடிவுகள்:
நடுவர் குழு
=============
முனைவர் ப. பத்மாவதி
முனைவர். இரா. மோகனா
மயிலம் இளமுருகு
முனைவர் அகன்( அமைப்பாளர்)
முடிவுகள்:
==========
முதல் பரிசு
கவிஞர் சியாமளா ராஜசேகர்
ரூ3000/_மற்றும் 75 நூல்கள்
இரண்டாம் பரிசு
தலா ரூ750/_மற்றும் 50 நூல்கள்
கவிஞர் கிரேஸ்
கவிஞர் கனிமொழி
மூன்றாம் பரிசுகள்
தலா ரூ500/_மற்றும் 25 நூல்கள்
கவிஞர் அனிதா ராஜேஷ்
கவிஞர் வித்யா மனோகர்
கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜு
கவிஞர் ரம்யா ரவீந்திரன்

என்னுடைய கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.


2 கருத்துகள்:

  1. ரம்யா வாழ்த்துகள் உங்கல் கவிதைத்தொகுப்பும் வெளி வர வாழ்த்துகள்!

    இதில் கவிஞர் க்ரேஸ் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவரும் பதிவர்தான். அவரும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்திற்கு நன்றி திரு.துளசிதரன்/கீதா. கவிஞர்.கிரேஸ் அவர்களை இப்பொழுது தான் தெரியும். அதிகம் பரிச்சயம் இல்லை.

    பதிலளிநீக்கு