சென்ற வாரம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தில்லி கலை இலக்கிய மன்றம்,எஷிதா மீடியா மற்றும் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து, ஒரு சிறப்புக் கருத்தரங்கத்தை, கவிஞர் கண்ணதாசனின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் வரிகளை, கவிஞர் வைரமுத்து எடுத்தாண்டுள்ளாரா என்பதைப் பற்றிப் பேச என்னை அழைத்திருந்தனர்.
கவிஞர் இருவருமே மாபெரும் மேதைகள். இருவரும் 7000க்கு மேற்பட்ட திரைப் பாடல்கள், நிறைய இலக்கிய படைப்புகள் என்று தமிழ்ப் படைப்புலகில் மாபெரும் சிகரங்கள். இவர்கள் இருவரின் படைப்புகளை அலசி ஆராய்ந்து ஒத்த சிந்தனை உள்ள கருத்துக்கள் இருவரின் கவிதைகளிலும் இடம் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிந்து சொல்வது எளிதானது அன்று. எனினும் எனக்குத் தெரிந்த அளவில் இருவரையும் ஒப்பிட முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய உரையை கீழுள்ள வலையொளி இணைப்பில் காணலாம். என்னுடைய உரை 2:13 அளவில் தொடங்குகிறது