செவ்வாய், ஜூலை 06, 2021

FETNA முன்னோட்ட நிகழ்வு

 வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை (FETNA) என்பது அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த 2021 ஆண்டு பேரவையின் விழா அட்லாண்டா நகரில் அக்டோபர் 8,9,10 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக பேரவையின் முன்னோட்ட விழா இந்த வாரம் ஜூலை 3 சனி அன்றும் , ஜூலை 4 ஞாயிறு அன்றும் நடந்தது. அந்த நிகழ்வின் காணொளிகள் கீழே.

 முதல் நாள் விழா:



 அடுத்த நாள் விழா:


 

இந்த நிகழ்வில் தமிழ் இலக்கியத்தில் சமூக நீதிப் பயணம் என்ற தலைப்பில் நானும் பேசினேன். மேலே உள்ள காணொளியில் 57:30 வது நிமிடத்தில் இந்த பேச்சு ஒளிபரப்பாகியது. இந்த பேச்சின் நேரடி காணொளியை மட்டும் கீழே பார்க்கலாம்.



கிட்ட தட்ட 10,000 பேர் அமர்ந்து பார்க்க கூடிய அளவு பெரிய ஜார்ஜியா வேர்ல்ட் காங்கிரஸ் சென்டர் என்ற அரங்கில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது.

பல்வேறு இலக்கிய ஆளுமைகள், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து தமிழ்ச் சங்க அமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் விழா இது. இந்த நிகழ்வில் உங்களால் நேரில் வர முடிந்தால் கலந்து கொள்ளுங்கள் .இல்லையெனில், இந்த நிகழ்வின் நேரலையை வலைத்தளத்தில் கண்டு மகிழுங்கள். மேலே உள்ள காணொளியில் இந்த நிகழ்வு நடக்கப் போகும் அரங்கு, அங்கு உள்ள வசதிகள், FETNA- வில் உள்ள பல்வேறு குழுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் என்று பல விஷயங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளது.  ஒரு சிறப்பான மாபெரும் நிகழ்விற்கான முன்னோட்டமாகவே இந்த நிகழ்வு அமைந்தது என்பதை உறுதியாக சொல்லலாம்.