வெள்ளி, டிசம்பர் 18, 2020

வல்லினச் சிறகுகள் - கவிதை நேரம்

உலக பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா என்ற அமைப்பு மாதம் ஒரு முறை வல்லின சிறகுகள் என்ற மின்னிதழை வெளியிட்டு வருகிறது. கவிஞர்களுக்கு அதுவும் குறிப்பாக பெண் கவிஞர்களுக்கு மட்டுமேயான இந்த இதழ் நேர்காணல், மொழி பெயர்ப்பு கவிதைகள், அயல் நாட்டு கவிஞர்கள் அறிமுகம் மற்றும் உலகெங்கும் உள்ள பெண்கள் எழுதும் கவிதைகள் ஆகியவற்றை தாங்கி வருகிறது. செப்டெம்பர் 2020 தொடங்கப்பட்ட இதழ் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வாக்கில் வெளியாகிறது. சென்ற இதழில் மட்டும் அல்லாமல் இந்த மாத இதழிலும் என்னுடைய கவிதை வெளியாகி உள்ளது. கீழ் உள்ள இணைப்பில் இந்த மின்னிதழை வாசிக்கலாம்.

https://tinyurl.com/y79sywfs

என்னுடைய கவிதை கீழே:

கருப்பொருள்


அந்தி மஞ்சள் வானம் அடர்நிற தேநீர்

பளிங்கு வெள்ளை தாள்களில் 

கவி பச்சைக் குத்த பேனா

பாடு பொருளாய் எதைக் கொள்வது 

பளிங்கு நிலவை வர்ணித்து

நட்சத்திரங்கள் அளவு கவிதை நெய்தாகிவிட்டது

காதல் பற்றி திரைப்பாடல் சொல்லாததை 

ஒருபோதும் என் பேனா பிரசவிக்காது

மழலை தருமின்பம் ஒரு தாயை விடவா

என்னால் அழகுற தமிழில் வடிக்க முடியும்

நாட்டைப் பற்றி முண்டாசுக் கவி பேசாததையா

இந்தச் செல்பேசிக் கவியால் உரைக்கவியலும்

பெண்ணைக் கவிதையால் போற்றலாம்

எனினும் சுயவிளம்பரத்தில் பற்றில்லை

இயற்கையை கவிதையில் சுருக்க

கனமான சொற்கள் என் வசமில்லை

பாடுபொருளற்ற நேரங்களில்

வார்த்தைகளால் வடிக்கவியலா மௌனமே

மென்கவிதையாகி விடுகிறது





அத்துடன் வல்லின சிறகுகள் அமைப்பு நடத்தும் உலகளாவிய மருத்துவர் ஜெ. அம்பிகாதேவி நினைவுப் பரிசு போட்டியை பற்றிய விவரங்களை பக்கம் மூன்றில் காணலாம். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. பார்த்து பயனடையுங்கள்.



சென்ற வல்லின சிறகுகள் இதழில் வெளியான கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://pachaimannu.blogspot.com/2020/11/blog-post.html






புதன், டிசம்பர் 16, 2020

ஹீரோ




சுகிர்தா மேக்கப் உமனிடம் முகம் கொடுத்திருந்தாள்மாநிறமாகநல்ல அழகான முகவெட்டு கொண்டிருந்தாள்ஐந்தடி ஐந்து அங்குல உயரம்அழகாக நடனம் ஆடும் 

திறமை,நன்றாக நடிக்கும் திறமைநன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்று 

தேவைக்கு அதிகமாக தகுதி பெற்றிருந்தும் இன்னும் அதிர்ஷ்ட காற்று அவள் பக்கம் 

வீசவில்லைவிமர்சகர்களால்  சிலாகிக்கப்பட்ட ஒரு சில படங்களில் அவள் தோன்றி இருந்தாலும் இன்னும் கமர்சியல் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை

எனவே பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தாள். 

பள்ளி காலங்களில் டிராமா  என்றால் கண்டிப்பாக சுகன்யா இல்லாமல்  இருக்க 

மாட்டாள்சுகன்யா என்பதே அவளுடைய இயற் பெயர்அதே பெயரில் வேறு ஒரு 

நடிகை இருந்ததாலும் கொஞ்சம் மாடர்னாக இருக்கட்டும் என்றும்  சுகிர்தா என்ற 

நாமகரணத்தை சினிமாவிற்காக சூட்டிக் கொண்டாள்கொஞ்சம் நடுத்தர குடும்பம் அவளுடையதுஅம்மா அப்பா ஒரு தங்கை என்று அளவான குடும்பம்அப்பா ஒரு 

தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்அம்மா குடும்பதலைவிஅளவான வருமானம் இருந்ததால் குடும்பத்தை நடத்துவது ஓரளவு எளிதாக இருந்தததுஎந்த விதமான பெரிய ஆடம்பரத்தையும் அவள் அனுபவித்ததில்லை

எனினும் வாழ்க்கை அழகாகவே போனது


பதினொன்றாம் வகுப்பில் படித்த போது அவளுடைய பள்ளியில் கண்ணகி 

நாடகத்தை நடத்தினார்கள்கண்ணகியாய் அவள் வசனம் பேசி நடித்த போது 

அத்தனை தத்ரூபமாக இருந்தது


தேரா மன்னா" என்று அவள் மன்னனை எதிர்த்து குரல் கொடுத்த போது மொத்த 

பள்ளியிலும் விசில் பறந்ததுகண்ணகியை நடித்தாள் என்பதை விட கண்ணகியாய் வாழ்ந்தாள்  என்றே சொல்லலாம்நாடகம் பெரிய ஹிட் என்பதால் அவளை பள்ளியில்அனைவருக்கும் தெரிந்ததுவலிய வந்து அவளிடம் அந்த பள்ளி மாணவர்கள் 

பேசினார்கள். 


அவளுடைய மனசு மட்டும் அவர்கள் இருந்த தெருவில் குடியிருந்த பிரசாத்தின் கண்பார்வை கிட்டுமா என்று ஏங்கியதுபிரசாத் அவர்கள் வீட்டின் அருகில் இருந்த வீட்டில் வசித்த கொஞ்சம் வசதியான குடும்பத்தை சார்ந்த பையன்அவன் எப்போது சைக்கிளில் செல்கிறானோ அப்பொழுதெல்லாம் "ராசாத்தி மனசுலே என் ராசா உன் நெனப்பு தான்என்ற பாடலோ அல்லது "அடி ஆத்தாடிபாடலோ அவள் வீட்டு ரேடியோவில் 

மிகவும் சத்தமாக ஒலிக்க விடுவாள் சுகன்யாபிரசாத்தும் அவளுடைய வீட்டை 

கடக்கும் போது மிகவும் மெதுவாக கடப்பது போல் அவளுக்கு தோன்றும்அவள் குடியிருந்த வீட்டில் வேறு ஒரு போர்ஷனில் உள்ள சதீஷுடன்  சேர்ந்து அவன் கல்லூரி செல்வதால் அவளுடைய வீட்டிற்கு  முன் அவன் சிறிது நேரம் நிற்பது வழக்கம் என்றாலும் பிரசாத் தனக்காகவே நிற்பதை போல கற்பனை செய்து கொள்வாள்அவளுடைய 

கனவுகளில் கூட பிரசாத் வர ஆரம்பித்தான்அவனுடைய சிவந்த நிறமும்அரும்பு 

மீசையும்அழகான உதடுகளும் அவளுக்கு கனவுகளின் வழியே பரிச்சயம் 

ஆகியிருந்ததுஇப்படிப்பட்ட விடலை பருவ சந்தோஷங்களுடன் வாழ்க்கை 

இயல்பாகவே சென்று கொண்டிருந்தது 


பதினொன்றாம் வகுப்பு முடிவுறும் சமயம் ஒரு நாள் அவளுடைய அப்பாவிற்கு 

திடீரென்று நெஞ்சு வலிஅவர் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே வைத்தியம் பார்த்தும் அவரை காப்பாற்ற முடியவில்லைஇரண்டு பெண்களை வைத்துக் 

கொண்டு எப்படி கரையேற்றுவது என்று அவளுடைய தாயார் மலைத்தாள்

சுகன்யாவின் சித்தி சென்னையில் வசிப்பதால் அங்கேயே சென்று வசிப்பது என்று 

முடிவாயிற்றுபிரசாத் அவள் வீடு காலி செய்யும் சமயம் அந்த வழியே கடந்த போது "போறாளே பொன்னுத்தாயிஎன்ற பாடல் எங்கிருந்தோ ஒலித்ததுசுகன்யாவின் கண்களில் வழிந்த நீரை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. 


சென்னைக்கு சென்ற பின் பனிரெண்டாம் வகுப்பு பாஸ் செய்து விட்டுஒரு 

நிறுவனத்தில் சேல்ஸ் கேர்ளாக பணியில் சேர்ந்தாள். "அம்மா வாங்க இந்த சோப்பை ட்ரை பண்ணுங்கஇந்த அழகான லிப்ஸ்டிக்கை  ட்ரை செய்யுங்கஎன்று கூவி கூவி வாடிக்கையாளாரை கடைக்கு வரவழைத்து 

அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் வேலைபளிச்சென்று அழகாக பேசி வாடிக்கையாளரை பிடிக்கும் வித்தை அவளுக்கு கைவந்ததால் அவள் நல்ல 

விற்பனையாளராக மிளிர்ந்தாள்எனினும் அதில் வந்த வருமானம் பத்தவில்லை 

என்பதால் வேறு வேலைக்கு முயற்சி செய்த போது தான் சினிமாவில் துணை 

நடிகைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் பார்த்து விட்டு ஒரு நிறுவனத்தில் பகுதி நேரத்திற்கு வேலைக்கு சென்றாள்கொஞ்சம் அழகான முகவெட்டு உள்ளதால் சில 

படங்களில் நடிகையின் தோழிகளில் ஒருவராக தோன்றும் வாய்ப்பு கிடைத்தது

அப்படியே சில துணை கதாபாத்திரத்தில் நடித்ததும் கொஞ்சம் அவள் முகம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகத்  தொடங்கியதுசென்ற வருடம் அவள் நடித்த "பிருத்வி

திரைப்படம் மூலம் தான் அவளுக்கு பெரிய திருப்பம் கிடைத்தது.  பெரிய நடிகர்கள் 

இல்லை என்றாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படம் என்பதால் தமிழ் சினிமாவில் 

கவனிக்கப் படவேண்டிய நடிகை என்று சில பத்திரிக்கைகள் பாராட்டியது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததுஅம்மாவுக்கு அவள் திரைப்படத்தில் நடிப்பது 

பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய உபரி வருமானம் அந்த குடும்ப வண்டி ஓட்ட உதவியது என்பதால் பெரிதாக ஒன்றும் கூறவில்லைஎனினும்அம்மா "பார்த்துக்க

சினிமாவில் எந்த இடத்தில இருக்கும் நடிகையை  பற்றியும் யாரும் நல்ல விதமா 

சொல்றது இல்லை.  இதெல்லாம் நமக்கு சரி வருமான்னு தெரியலநீயும் பார்த்து 

நடந்துக்கஎன்று மட்டும் சொன்னாள் 


"இல்லம்மாநீ நெனைக்கற மாதிரி எல்லாம் இல்லைஇங்கே நாம சரியாய் இருந்தா 

எல்லாம் சரியா நடக்கும்என்று நம்பிக்கையாய் சொன்னாள். 

அந்த நம்பிக்கை  ஒரு பெரிய இயக்குனர் ஒருவர் தொலைபேசியில் அழைக்கும் வரை தான்சுகிர்தா  மேடம் "உங்களுக்கு ஓரு  நல்ல ரோல் இருக்கு என்று சொல்லி ஒரு 

பிரபல நடிகர் பெயரை சொல்லிஅவர் கூட குண்டலகேசி அப்படிங்கற படம் 

செய்யறோம்அந்த படத்துல ஒரு பெண்ணியவாதி கதாபாத்திரம்உங்களுக்கு நல்லா  சூட் ஆகும்இன்னைக்கு ஒரு சின்ன மேக்கப் டெஸ்ட் எடுத்திடலாம்.  சாயங்காலம் 

வந்திடுங்கஎன்று சொல்லி ஸ்டூடியோ விலாசத்தை கொடுத்தார் 


அந்த மேக்கப் டெஸ்ட்க்கு தான் இப்பொழுது மேக்கப் நடந்து கொண்டிருந்ததுஒரு 

மாக்சி உடைஒரு ஜீன்ஸ்-பேண்ட்ஒரு குர்தா-பைஜாமா என்று மூன்று விதமான உடைகளில் அவளை வித விதமாய் வளைத்து 

வளைத்து போட்டோ எடுத்தார்கள்மேலே பாருங்கஇங்க பாருங்ககொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்கநடந்து வந்து இடுப்புல கை வெச்சு நில்லுங்க என்று பல்வேறு 

கட்டளைகளை ஏற்று அவள் பம்பரமாய் சுழன்றாள்கடைசியாக முடிந்தது என்று 

நினைத்த போது ஒரு கவர்ச்சியான உடையை கொண்டு வந்து கொடுத்து இதுலயும் கொஞ்சம் போட்டோ எடுத்திடலாமா என்றார் அந்த போட்டோகிராபர் . "இல்லை சார்என் முகவெட்டுக்கு இந்த உடை சரிவராதுஎன்று கூறி மறுத்து விட்டு 

அங்கிருந்து வெளியேறினாள் சுகிர்தாஅடுத்த நாள் டைரக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது


"சுகிர்தாநீங்க நல்லா பொருந்துவிங்க  இந்த ரோலுக்குசம்பளம்  எவ்ளோன்னா

என்று அவளுடைய வாழ்க்கையில் கேட்டிராத ஒரு தொகையை கூறினார்அப்புறம்

நீங்க அந்த உடைகளை மறுத்தது ஏன்னு தெரியலசமூக வலைதளத்துல நிறைய 

நடிகைகள் தங்களை படம் எடுத்து  போடற உடைகளை விட மிகவும் டீசண்டான 

உடைகள் தான் அவை . நீங்க இதை போட மறுத்ததால மற்ற விஷயங்களிலும் இதே மாதிரி வளைஞ்சி கொடுக்காம இருப்பிங்களோன்னு தோணுது..


"அது என்ன சார்  வளைஞ்சி  கொடுக்கறது?"  என்றாள் சுகிர்தா கொஞ்சம் கோபமாக. "நீங்க கேக்கறதால் சொல்றேன் எங்க கம்பெனிலே புக் பண்ற எல்லா ஹீரோயினும் 

ப்ரொடியூசர் நடிகர்  போன்றவர்களிடம் நெருக்கமா பழக வேண்டி இருக்கும்இதுல 

ஒண்ணும் சங்கடம் இல்லனா நாம மேற்கொண்டு பேசலாம் ." என்றான்இதை கேட்ட சுகிர்தாவிற்கு தீயை மிதித்தது போல இருந்தது. "சரி சார்நான் யோசிச்சு சொல்றேன்." என்றாள். 


"ரொம்ப நேரம் எடுக்காதிங்கஇன்னைக்கு வேறு ரெண்டு ஹீரோயினுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க போறோம்எவ்ளோ சீக்கிரம் சொல்றிங்களோ அவ்ளோ சீக்கிரம் 

நல்லதுஎன்று கூறி விட்டு போனை வைத்து விட்டான். 


சுகிர்தா அன்று இரவு முழுதும் தூங்கவில்லைஅவள் கண்ணசந்து தூங்கும் போது 

பொழுது புலர்ந்திருந்ததுகாலை எழுந்த போது இரவில் வராத தூக்கம் அவள் 

கண்களில் தெரிந்ததுகாபி எடுத்துட்டு வந்த அம்மா "என்னம்மா கண்ணு 

சிவத்திருக்கு.தூங்கலையாஎன்றாள்


"இல்லம்மா நேத்தி போன மேக்கப் டெஸ்ட்ல செலக்ட் பண்ணனும்னா ஒரு சில 

அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாரா இருக்கணும்னு சொல்றாங்கஎன்று கூறி விட்டு 

மௌனமானாள்அம்மா அவளுடைய முகத்தை கொஞ்ச நேரம் பார்த்தவாறே 

இருந்தாள்.  பின்னர் மெதுவாக சொன்னாள் "எனக்கு தூரத்து சொந்தக்கார பெண் 

ஒருத்திகாலேஜ் போகணும்னு ஒத்தக்கால்ல நின்னு காலேஜில் சேர்ந்தாஅவளோட 

வீடு கொஞ்சம் ஊரை விட்டு ஒதுக்குப்புறமா இருந்ததுஅவ காலேஜ் முடிஞ்சி திரும்பும் போது பெரும்பாலும் இருட்டிடும்அதனால அவளுக்கு தனியா நடந்து வர பயமா 

இருந்ததுஒவ்வொரு நாளும் அவ திரும்ப வர சமயத்துக்கு யாராவது வந்து நின்னு  

கூட்டிட்டு போறது என்பதும் முடியாத ஒன்றுஒரு நல்ல யோசனை தோணிச்சு அவளுக்குஒரு ரெண்டு பாக்கெட் பிஸ்கட் வாங்கி வெச்சிக்கிட்டுஅவ வீட்டுக்கு போகற 

ரோட்ல இருக்கற நாய்களுக்கு எல்லாம்  பிஸ்கட் போட்டுகிட்டே வருவாஅந்த 

நாய்களும் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு இவள பத்திரமா வீட்டில் கொண்டு 

வந்து சேர்த்திடும்இப்படியே அவள் காலேஜ் முடிச்சி வெளியிலயும் வந்திட்டாநீயும் அவளை போல புத்திசாலி பொண்ணு தான்இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா எதை எல்லாம் நம்மால் இழக்க முடியும் எதை எல்லாம் இழக்க கூடாது அப்படிங்கற புரிதல் வேணும் என்பதற்கு தான்ஆனா குறுகிய கால வெற்றி என்பது வேறுநிலைத்து நிற்க கூடிய வெற்றி என்பது வேறுஇதில் நீ நீண்ட கால வெற்றி பாதையை தேர்ந்து 

எடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குஎன்று சொல்லி அவள் தலையை வருடிக் கொடுத்தாள் 


அன்றே அவள் முதல் வேலையாக அந்த டைரக்டருக்கு போன் செய்து "சார் இந்த தேதிக்கு என்னுடைய கால் சீட் இல்லைஎன்னால இந்த ரோலை பண்ண முடியாது

மன்னிச்சிடுங்கஎன்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள். 


குண்டலகேசி ஒரு ஆண்டு கழித்து ஒரு தீபாவளி அன்று வெளி வந்ததுஅந்த படம் 

வெளிவரும் போது சுகிர்தா அவள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்திற்கே தலைமை விற்பனைப் பெண்ணாக பணியில்  இருந்தாள்சினிமாவில் கிடைத்த 

வெளிச்சத்தினால் இப்போது அவளுக்கு  வெளியே நின்று கஸ்டமரை  அழைக்கும் 

அளவிற்கான வேலை இல்லைஏசி ரூமிற்குள்ளே இருந்து மற்ற பணியாளர்களை 

மேய்க்கும் வேலைதீபாவளி சமயம் என்பதால் கூட்டம் அதிகம்தற்செயலாக அவள் அந்த கடையில் இருந்த டீவியில் பார்த்த போது அந்த படத்தில் பெண்ணியவாதி 

வேடத்தில் நடித்த நடிகையிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்இந்த வேடத்திற்கு எப்படி சரியான தேர்வு நீங்க தான்னு முடிவு பண்ணாங்கஅந்த 

பெண்ணும் சிறிதும் யோசிக்காமல் "ஒரு பெரிய பிரேக்கிங் ரோல் இதுநான் இதற்காக நிறைய பயிற்சி எடுத்தேன்என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் தான் இந்த வெற்றி சாத்தியம் ஆச்சுஎன்று சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்தாள்அந்த பதிலை எந்த வித சலனமும் இன்றி செவிமடுத்த சுகிர்தா வந்திருந்த வாடிக்கையாளருக்கு 

உதவுவதிலேயே குறியாக இருந்தாள். 


வாடிக்கையாளரின் தேவைகளை கவனிக்க நல்ல அனுபவம் மிக்க 

விற்பனையாளர்களை அனுப்புவதுவாடிக்கையாளரை கனிவாக உபசரிப்பது

அவர்கள் தேடும் பொருட்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதை அவர்களுக்கு 

அறிவுறுத்துவது என்று பல்வேறு பணிகளில் சுழன்று சுழன்று பணியாற்றிக் 

கொண்டிருந்தாள்அவளுடைய சுறுசுறுப்பு மற்றும் கனிவான அணுகுமுறை அவள் வேலை பார்த்த அந்த நிறுவனத்திற்கு மிகவும் பிடித்திருந்ததுஅந்த நிறுவனம் 

தயாரித்த விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவள் கேட்கமாலேயே அவளுக்கு  

கிடைத்ததுஅந்த விளம்பரத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு பின் அவளுக்கு 

அதே போன்ற சில விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியதுஅதன் மூலம் 

அவளுக்கு விளம்பரம் இயக்கும் ஆர்வமும் ஏற்பட்டதுஒய்வு நேரத்தில் இயக்குனர் 

ஆவதற்கான பயிற்சியில் ஈடுபட்டாள்சிறிது நாள் கழித்து அவள் பார்த்து வந்த 

வேலையை விட்டு விட்டு ஒரு இயக்குனரிடம்  உதவி இயக்குனராக சேர்ந்தாள்ஒரு 

சில படங்களில் பணியாற்றிய அனுபவத்தில் அவளே குறும்படங்கள் எழுதி இயக்கி 

அதை ஊடகத்தில் பதிவேற்றி வந்தாள்அவளுடைய ஒரு குறும்படத்தை முழு நீள 

திரைப்படமாக தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார்முதல் படமே பெரிய 

வெற்றிஇரண்டாவது படம் முதலுக்கு மோசமில்லாமல் போயிற்றுமூன்றாவது படம் பிரமாண்ட வெற்றி.  மளமளவென்று  பத்து படம் இயக்கி விட்டாள்அவற்றில் ஐந்து 

படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றவைஅவளும் ஸ்டார் இயக்குனர்களில்  

ஒருவராக ஆனாள். 

பத்தாவது படத்தின் வெற்றி விழாபத்திரிக்கையாளர்களுடன் நேரலையில்  ஒரு நேர்காணல்பெண் இயக்குனர் என்பதால் சில அபத்தமான கேள்விகளும்  வந்தன

சமாளித்து அழகாய் பதிலளித்தாள்.


"ஒரு நடிகையாவும் இருந்திருக்கிங்க ஒரு இயக்குனராகவும் இருந்திருக்கிங்க

உங்களை கவர்ந்த ஹீரோ யார் " என்றார் ஒரு மூத்த பத்திரிகையாளர்சுகிர்தாவுக்கு சின்ன வயதில் அவள் மனதிற்கு நெருக்கமான பிரசாத்தின் நினைவு வந்து போனது

என்னுடன்  நடிக்க கொஞ்சம் வளைஞ்சி கொடுக்கணும்என்று சொன்ன நடிகரும் 

நினைவில் வந்து போனார்


"என்னை பொறுத்த வரை ஹீரோ என்பவர் நாங்க எடுக்கற படத்துல பிரதான 

வேடத்தில் நடிக்கறவர் இல்லஹீரோ என்பவர் தான் மட்டும் ஜெயித்து ஒரு பெரிய 

உயரத்தை அடைபவர் அல்ல , தன்னை சுற்றி  இருக்கும் அனைவரும்  ஒரு படி முன்னே செல்ல வேண்டும் என்று நினைப்பவரே உண்மையான ஹீரோ.  நடிகையா நான் 

தனியா பயணப்படும் போது  இருட்டுங்கற தொழில் சார்ந்த சிக்கல்கள் ஒரு பக்கம் 

பயத்தை  தந்தது.  துரத்துற நாய் என்கிற வறுமையும்  ஒரு பக்கம் இருந்ததுஇந்த 

இரண்டு சிக்கல்களையும் ஒண்ணா சமாளிக்கற தைரியம் இல்லைஎன்னுடைய 

வெற்றி என்னன்னா எனக்கு பயம் தந்த இந்த இரண்டுல எதை அனுபவமாக்கணும்  

எதை விட்டு தள்ளி வரணும்னு புரிய வைத்த  பெயர் தெரியாத  ஒரு அக்கா

பணத்திற்காக செய்யும் எதுவும் சரி என்பது ஒரு போலியான நிர்பந்தம்இப்படித்தான் வாழணும்னு வரையறை ஏற்படுத்திய அம்மாபடிச்சிகிட்டே வேலை பார்த்து 

தன்னையும் முன்னேத்திதன்னுடைய சம்பாத்தியதால தன்னோட குடும்பத்தையும் முன்னேற்றும் மனோதிடம் கொண்ட என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் என்று 

சமூகம் சாமானிய மனிதர்கள் என்று எளிதாக புறம் தள்ளும் மனிதர்கள் தான் 

என்னோட நிஜ ஹீரோக்கள்இதை எதற்கு சொல்றேன்னா வளர்ந்து வரும் 

நடிகைகளுக்கும்அது இல்லாம பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் 

உங்களால் சமரசம் செய்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் எதுஉங்களால எதுல  

சமரசம் செஞ்சுக்க முடியாதுங்கிறதுல தெளிவு இருந்தா நீங்க போக வேண்டிய 

இடத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கும் வழிகள் உங்களுக்கு தானாகவே திறக்கும்அதற்கு என்னுடைய வாழ்க்கையே சரியான உதாரணம்.  உங்களை இழந்து பெறுவது வெற்றி அல்லஉங்களின் மனோதிடத்தைஉங்களின் அனுபவத்தை பெருக்கி 

பெறுவது தான் வெற்றிநான் நிற்கும் இந்த மேடை எப்படி பெயர் தெரியாத 

மனிதர்கள் அமைத்ததோ அதே போல என்னுடைய வெற்றியும் பெயர் தெரியாத 

மனிதர்களின் தோள்கள் மேல் நின்றே நான் பெற்றதுஎன்னுடைய உண்மையான 

ஹீரோ இந்த எளிய மனிதர்கள் தான். "  


நேரலையில் சுகிர்தா சொல்வதை கேட்ட அந்த இளம் நடிகை பட வாய்ப்பிற்காக 

தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடவிருந்த 

அவளுடைய எண்ணத்தை கைவிட்டாள்அதிகாலை கதிரவன்  இருளை கிழித்து  

தன்னுடைய பயணத்தை எவ்வாறு அந்தி வானம் என்ற சிறு புள்ளியில் இருந்து 

துவக்குமோஅதே போல மாற்றம் என்பதும் ஒரு சிறு புள்ளியில் இருந்தே துவங்கியது.