நியூயார்க் நகர தமிழ் சங்கம் தன்னுடைய பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக 3 வாரங்களாக, டிசம்பர் 4 முதல் டிசம்பர் 18 வரை வெள்ளி தோறும் பல்வேறு சிறப்பு பேச்சாளர்களை அழைத்து வந்து சிறப்பு கருத்தரங்கங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வழியில் சென்ற வாரம் பாலகிருஷ்ணன் IAS அவர்களின் கீழடியும், சிந்து வெளியும் ஒன்றே என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடந்து வந்தவர்களே நாகரிகம் படைத்தவர்கள் என்பதும், பயணத்தின் திசையை விட முக்கியமானது பயணம், பயணத்தை விட முக்கியமானது பயணி என்பதையும் , மண்மாரியில் அழிந்தது உறையூர் என்பது போன்ற புதிய தகவல்களையும் முன் வைத்தார். காணொளியில் இணைப்பு கீழே.
நேற்று வெள்ளிக்கிழமை அன்று கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தமிழை பிழையின்றி பேசுவது எப்படி என்று அருமையாக ஒரு நிகழ்ச்சியை வழங்கினார். கருப்பு பூனை படை என்பது சரியா அல்லது கறுப்பு பூனை படை என்பது சரியா, 19-வது பிறந்த நாளா அல்லது 19-ஆவது பிறந்த நாளா, இலகுவாக என்பது சரியா என்பதையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த காணொளியை பார்த்து பயன் பெறுங்கள்.
அடுத்த வாரம் நியூயார்க் நகர தமிழ் சங்கத் தலைவர் திரு அரங்கநாதன் உத்தமன் அவர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார். நிகழ்ச்சியை nytsponvizha என்ற ஹாண்டிலில் Youtube-இல் காணலாம். https://nytsponvizha.com என்ற இணைய பக்கத்திலும் https://fb.com/NewYorkTamilSangam என்ற முகநூல் பக்கத்திலும் கண்டு களிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக