சனி, டிசம்பர் 12, 2020

அமெரிக்கன் தமிழ் அகாடமி - ஆண்டு மலர்


அமெரிக்கன் தமிழ் அகாடமி  என்பது அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கான ஒரு அமைப்பு. அமெரிக்காவில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கான புத்தகங்களை வடிவமைத்தல், ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளை நிர்வகிக்க தேவையான மென்பொருள் தயாரித்தல், ஒரு தமிழ்ப் பள்ளி ஆரம்பித்து நடத்த தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் தன்னார்வல அமைப்பே இந்த அமெரிக்கன் தமிழ் அகாடமி. இந்த அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக சென்ற ஆண்டு 2019 நவம்பர் 23 அன்று சார்லட் மாநகரில் ATA விழா சிறப்பாக நடைபெற்றது.  விழாவின் நிகழ்வுகள் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வினை பற்றி என்னுடைய வலைத்தளத்தில் முன்பே ஒரு பதிவு எழுதியிருந்தேன் . ஆனால் இப்பொழுது எழுவதற்கு முக்கிய காரணம் இந்த ATA விழாவில் வெளியிட்ட ஆண்டு மலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மலர் குழுவில் நானும் இடம் பிடித்திருந்தேன். மலருக்கு என்று வந்திருக்கும் படைப்புகளை சரியாக வடிவமைத்து அதை நூல் வடிவமாய் வெளியிடும் பொறுப்பு எங்கள் குழுவிற்கு தரப்பட்டிருந்தது. அது மட்டும் அல்லாமல் ,என்னுடைய எழுத்துக்களும், கட்டுரையும் பக்கம் 23 மற்றும் பக்கம் 28 ஆகிவற்றில் வெளிவந்து உள்ளது. https://www.americantamilacademy.org/?page_id=2141 என்ற தளத்தில் இந்த மலரை காணலாம். அமெரிக்காவில் ATA கல்வி வழி நடத்தப்படும் தமிழ் பள்ளிகளை சார்ந்த குழந்தைகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என்று நிறைய பேர் இந்த மலருக்கான படைப்புகளை அளித்திருந்தார்கள். கடல் கடந்து வாழும் தமிழ் உள்ளங்களின்  தமிழ் ஆர்வமும் இந்த மலரின் வழி புலனாகிறது. நினைவுகளை மீட்டும் இந்த நிகழ்வின் நேரலை இணைப்புகள் கீழே உள்ளது. எங்கள் பள்ளி அகரம் தமிழ் பள்ளியின்
சார்பாக எங்கள் பள்ளி மாணவர்கள் நடனமாடிய "தங்க தமிழ்நாடு" என்ற தமிழ் ஊர்களை பற்றிய நடனமும் முதல் இணைப்பில் உள்ளது.  

https://fb.watch/2kPqYwRJdR/
https://fb.watch/2kMDgPh5CK/
https://fb.watch/2kMP5BayEJ/
https://fb.watch/2kMQn9ZU3K/
https://fb.watch/2kMR4mUS9i/
https://fb.watch/2kMZcNbdSE/
https://fb.watch/2kM_1xFCne/
https://fb.watch/2kM-cxpIiZ/
https://fb.watch/2kN0pkmoKx/
https://fb.watch/2kN1zCMKIT/
https://fb.watch/2kN2AYg-6V/
https://fb.watch/2kNa9jaO6b/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக