அழகான தமிழ் கவிதை ஒன்றை படைத்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சரி எழுதலாம் என்று வெள்ளை தாளை எடுத்து வைத்து கொண்டு குப்புற படுத்து யோசித்ததில் தூக்கம் மட்டுமே வந்தது. கவித கவித என்று கமல் போல பினாத்தியதில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு விதமாக என்னை பார்க்க ஆரம்பித்து விட்டதால் கவிதை எண்ணத்தை தற்காலிகமாக ஒத்திப்போட்டு என்னை கவர்ந்த சில கவிதைகள் இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
கேள்வி
குளிர்ந்த நீர் தானே ஏன்
வேர்கிறது பாட்டிலுக்கு
இந்த ஹைகூவை எழுதியது யார் என்று அதிகம் யோசிக்க வேண்டாம். இதை எழுதியது என் தங்கை. வேடிக்கை என்ன வென்றால் இந்த ஹைகூவை எழுதிய பின் என் தங்கை அதை படிப்பதற்காக எனது தந்தையாரிடம் நீட்டினாள். அவரும் ஒ யாரோ டிலுக்கு என்பவர் எழுதிய கவிதையா இது என்றது பெரிய காமெடி. ஏனென்றால் இடப்பற்றாக்குறை
காரணமாக அவள் பாட்டிலுக்கு என்ற வார்த்தையில் பாட் என்பதை
மேல் வரியிலும் டிலுக்கு என்பதை கீழ் வரியிலும் எழுதி இருந்தாள்.
டிலுக்கு என்பதை கவிஞர்/கவிதாயினியின் பெயர் என்று என் தந்தை நினைத்தால் வந்த குழப்பம் அது. அன்று முதல் அவளை நாங்கள்
செல்லமாக டிலுக்கு என்றுஅழைக்க ஆரம்பித்தோம்.அவள் எழுதிய வேறு சில கவிதைகள்.
மூன்றாம் விதி
தூண்டில் உணவை
தேடும் மீன் அறியுமா
நியூட்டனின் மூன்றாம் விதி
போதனை
பாரதி - ரௌத்திரம் பழகு
அன்னை தெரசா - அன்பே சிவம்
புத்தர் - ஆசையை துறமகாத்மா - வாய்மையே வெல்லும்
யார் போதிப்பார் - அரசியலில் நேர்மை ?
சில நாட்களாக மனசுக்கு பிடிபடாத கற்பனை குதிரைகள் நேற்று திடீரென்று எனது தேர் குதிரைகளாக மாறிய மதிய பொழுதில் எழுதிய சில கன்னி கவிதைகள்.
முதிர்கன்னி
காற்றில் கற்பூரம் போல்
தேயும் அழகும் இளமையும்
காட்டில் நிலவொளி
பாரபட்சம்
மழையை கண்டு ஆடிய மயிலை
கொண்டாடிய கவிஞனின் கண்ணில் படவில்லை
ஆர்ப்பாட்டமின்றி ரசிக்கும் அழகற்ற மண்புழுக்கள்
சுமை
வாழ்க்கை தந்த வலி மிகுந்த பாடங்களை
மறக்காமல் சுமந்து செல்கிறேன் தினமும்
என்றாவது ஒருநாள் உதவுமோ என்று
வாழ்க்கை தந்த வலி மிகுந்த பாடங்களை
மறக்காமல் சுமந்து செல்கிறேன் தினமும்
என்றாவது ஒருநாள் உதவுமோ என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக