ஞாயிறு, மே 10, 2020

ஓங்கு பறை

காலத்தை கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்றே இப்பொழுது பகுக்க வேண்டும். கொரோனாவிற்கு முற்பட்ட சென்ற ஆண்டில், அதாவது 2019-இல் சில தன்னார்வலர்கள், தமிழர் மரபு கலையான பறையை அனைவரிடமும் கொண்டு செல்லும் முகமாக வட கரோலினாவில் சார்லட் மாநகரில் பறை பயிற்சி பட்டறை நடத்தினார்கள். அந்த பறை பட்டறையில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து  பயிற்சி பெற்றனர். 2 நாட்கள் நடந்த பறை பட்டறை அட்லாண்டா மாநகரில் இருந்து வந்த முழங்கு பறை அமைப்பினரின் வழிகாட்டுதலின் பேரில் இனிதே நடைபெற்றது. இத்தனை பேருக்கும் தேவையான பறை, சலங்கை என்று பலவற்றை இந்தியாவில் இருந்து தருவித்து  குறித்த நேரத்தில் தருவது என்பது எத்தனை கடினமான விஷயம். ஆனாலும் தன்னார்வலர்கள் இதை ஒரு சேவையாகவே செய்தனர் என்றால் மிகை இல்லை.
கற்று கொண்ட பலரில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ச்சியாக நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஜோசப் வில்பிரெட் ஆல்வின் மற்றும் கிருத்திகா தம்பதியினர் ஆசான்களாய் வழிகாட்ட ஒரு அருமையான பறையாட்ட நிகழ்ச்சியை இந்த ஆண்டு 2020 பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று சார்லட் மாநகர் பொங்கல் விழாவின் போது நிகழ்த்தினார். ஓங்கு பறை என்ற பெயரை கொண்ட அந்த குழுவில் நானும் ஒரு அங்கம் என்பதை எண்ணி உவகை கொள்கிறேன். எங்கள் குழுவினரின் முதல் பறை நிகழ்ச்சியை மேலே உள்ள இணைப்பில் கண்டு களியுங்கள்.


2 கருத்துகள்:

  1. தமிழர் பாரம்பரியத்தை அமெரிக்காவிலும் பறை கொண்டு முழங்கிய உங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை, எத்தனை முறையானாலும் பார்த்து கேட்டு ரசிக்குப்படியாகவும் மிக மிக பெருமையாகவும் உள்ளது. பகிர்ந்தமைக்கு பங்குபெற்றமைக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
    அமைப்பாளர்களுக்கு தன்னார்வலர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஓங்குக!பறை!!

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பங்களிப்பு மிகவும் சிறியதே. எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் பொறுமையும், ஈடுபாடுமே எங்களுக்கு சிறந்த ஊக்கமாக இருந்தது. தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு