ஞாயிறு, மார்ச் 30, 2025

பூவிதழ் தேங்கும் தேன்மழை - பாடல்


ஒரு  பாடல் திரட்டு(மியூசிக் ஆல்பம்) உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று சில நாட்களாக ஒரு எண்ணம். சரி, இதைச் செயல்படுத்த, முதலில் ஒரு பாடல் எழுதுவோம், திரட்டு என்பதையெல்லாம் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணி பல்லவி, அனுபல்லவி, இரண்டு சரணங்கள் என்று ஒரு காதல் பாடல் எழுதியாயிற்று. ஆனால் இதற்கு எப்படி இசையமைப்பு செய்வது என்று பல நாட்களாக தேடல். இதற்காக சரியான இசையமைப்பாளரைப் பிடிக்க வேண்டும், அது தவிர பாடகர்கள் போன்றோரைக் கண்டுபிடிக்க வேண்டும். அதிக செலவும் ஆகலாம், என்ன செய்வது என்று யோசித்த போது, சில செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள்  கண்ணில் பட்டது .  இதில் பலவும் அடிப்படை வாடிக்கையாளருக்கு சில குறைந்தபட்ச சலுகைகளை கட்டணமின்றி அளிக்கின்றன. அடிப்படை வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் குறைவு தான். இருந்தாலும் ஒரு முதல் முயற்சிக்குத் தேவையான விஷயங்களை கற்றுக் கொண்டு ஓரளவு நான் எண்ணியதை செய்ய முடிந்தது என்பதே ஒரு அனுகூலமான விடயம் தான். செயற்கை நுண்ணறிவு எதைத் தருகிறதோ இல்லையோ சுயசார்பு என்ற ஒரு விஷயத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இது நல்லதா, கெட்டதா என்பது இதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கையில் தான் இருக்கிறது என்றாலும்  என்னுடைய முதல் பாடல் முயற்சி இந்தளவு சிறப்பாக வந்ததற்கு செயற்கை நுண்ணறிவே காரணம்.  அப்படி உருவான என்னுடைய முதல் தமிழ் இசைப் பாடலுக்கான இணைப்பு  கீழே. ஓரிரு முறைகள் கேட்டால் மனதில் பதிந்து விடக் கூடிய நல்ல மெட்டு அமைந்த பாடல் இதோ உங்களுக்காக. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக