செவ்வாய், மார்ச் 06, 2012

கானல் நீர் தடாகம்

சமீபத்திய இந்தியப்  பயணத்தின் போது எனது மனதை தைத்த பல தினசரி காட்சிகளை மனதில் கொண்டு புனைந்த கவிதை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தாலும் எனது ஜன்னல் வழி காட்சி மாறாது என்றே தோன்றுகிறது.




இதோ அந்தக் கவிதை.

கானல் நீர் தடாகம்

குழந்தையை காட்டி
கையேந்தும் சிறுமி
போதையில் சாலையை
சோலையாய் எண்ணி
புரளும் குடிகாரர்கள்
ஊரில் மழை பொழியும்
அதிசயத்தை வார்த்தையின்றி உணர்த்தும்
ஒல்லியான தெரு நாய்
சாக்கடை ஓரம்
மானுட வாழ்வின் உச்சத்தில்
எச்சமாய் புறந்தள்ளப்பட்ட  மூதாட்டி
கொளுத்தும் வெயிலிலும்
ஈர மனம் தேடும்
பிச்சைக்கார கிழவன்
பன்றியும் புறக்கணிக்கும்
குப்பை கூளத்தை
பிழைப்புக்காக பிழை
திருத்தும் பணியாளர்
கடக்கும் மனிதர்களின்
துயர் துடைக்க
கரம் கொடுக்காமல்
கவி புனையும்  நான் என
மாற்றத்திற்கே சவாலாய்
எனது இன்றும் நாளையும்

 

2 கருத்துகள்:

  1. பெயரில்லா3/06/2012 10:53 PM

    பச்சைமண்ணு, ரொம்ப நல்ல கவிதை. வழக்கமாக நான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்களை நீங்களும் பார்த்திருப்பது அருமை. ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் போது இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உங்களுக்கும் தோன்றாமல் இருக்காது. உணர்ச்சிகள் கவிதை வாயிலாக வந்ததிலிருந்தே அவை உங்களுக்குள் கனலாக எழுகிறதென்று அர்த்தம். உங்களால் முடிந்ததைச் செய்ய ஆரம்பியுங்களேன். ஒவ்வொரு அழகான ஓவியமும் ஒரு புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது. உங்களால் முடியும்..

    அன்புடன்,
    சீமாச்சு

    பதிலளிநீக்கு
  2. பச்சைமண்ணு3/08/2012 1:25 AM

    சீமாச்சு தங்கள் கருத்துக்கு நன்றி. ஒவ்வொரு ஓவியமும் ஒரு சிறு புள்ளியில் இருந்தே தோன்றுகிறது. அருமையான "டானிக்" வார்த்தைகள். சிறிய அளவிலாவது ஏதேனும் செய்யும் எண்ணம் உண்டு.அதற்கான தொடக்க புள்ளி இந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

    பதிலளிநீக்கு