கல்கோனா என்ற மின்னிதழும் பாலைவன பாவலர்களும் இணைந்து நடத்திய கவிதை போட்டிக்கு எழுதிய கவிதைகள். இதில் இருந்து இரண்டே கவிதைகளை தெரிவு செய்து கவிதை போட்டிக்கு அனுப்பி இருந்தேன்.
கவிஞர் பழனிபாரதி அவர்கள் தேர்ந்தெடுத்த 10 கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இப்போட்டிக்கு எழுதிய கவிதைகள் அனைத்தும் கீழே உங்கள் பார்வைக்கு. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி காதுகளை கொண்ட யானைக்கு பொருத்தமான கவிதையை அளிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி
சாதனை
வெள்ளை நிலாவை வண்ண நிலவாய் தீட்டியாயிற்று
சூரியனின் ஒளியை நீக்கி கருமை பூசியாயிற்று
மயிலை மஞ்சள் நிற பறவையாய் மாற்றியாயிற்று
கரிய யானைக்கு வானவில்லின் வண்ணம் சேர்த்தாயிற்று
கடவுள் துணியாததை தன் தூரிகையால் சாதித்துக் கொண்டிருக்கிறது குழந்தை