நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டியது தமிழ் புத்தக வாசிப்பு. ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் புத்தகங்களை வாசிப்பது என்பது ஒரு கனவாகவே உள்ளது. இதற்கு தமிழ் நூலகங்கள் இல்லாதது ஒரு காரணம் என்றாலும் பெரும்பாலும் இங்கு உள்ள நூலகங்களில் தமிழ் புத்தகங்கள் இல்லாததும் ஒரு பெரிய காரணம். இந்த குறையை களையும் பொருட்டும், இங்கு உள்ள நூலகங்களில் தமிழ் புத்தகங்களை எவ்வாறு கொடையளிப்பது, இதற்கு என்ன வழிமுறைகளை கையாள வேண்டும், தமிழகத்தில் எங்கே புத்தகங்கள் பெறுவது, அதை எவ்வாறு இங்கே கொண்டு வருவது என்று பல்வேறு விஷயங்களை பற்றிப் பேசி ஆவணப்படுத்தி இருக்கிறார்கள் வட அமெரிக்க தமிழ் ஆர்வலர்கள் குழுவினர். இந்த முன்னெடுப்பை மிச்சிகன் மாநிலத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார்கள். இங்கே பல பொது நூலகங்ளில் தமிழ் நூல்களை எடுத்து நீங்கள் படிக்க முடியும். ஊரில் இருந்து வரும் பெற்றோர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இருக்கும் போது தொலைக்காட்சியே கதி என்று இருக்கும் நிலை வராது. இந்த முயற்சியை வட அமெரிக்கா எங்கும் உள்ள பொது நூலகங்களில் நிகழ்த்தும் பொருட்டு எந்த தகவலையும் அளிக்கவும் தயாராகவே உள்ளது இந்தக் குழு. இவர்களை Ilakkiyairavu18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள முடியும்.
. தேமதுர தமிழோசை உலகெங்கும் பரவ வழி வகை செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக