வியாழன், ஜூன் 26, 2025

வடிவக் கவிதைகள்


கவிதைக்கு ஒரு வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை. கவிதைக்கு உருவம் உண்டா? நமது மனதில் ஒரு தாக்கம் அல்லது ஒரு நினைவை மீட்டெடுக்கும் கவிதை அதுவே ஒரு வடிவத்தை எடுத்துக் கொள்ளும் என்பதே உண்மை. ஆனால் கவிதையையே ஒரு வடிவத்தில் எழுதி, அது என்ன வடிவத்தை எடுக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்தக் கவிதைகள். 

#முக்கோணக் கவிதை

செல்பேசி வந்த பின் தொலைந்தது, சிட்டுக் குருவிகள் மட்டுமல்ல, சிட்டுக் குருவிகள் போன்று சுறுசுறுப்பாக விளையாடிய குழந்தைகள், செய்தித்தாள்கள், புத்தகம் படிப்பவர்கள் என்று பலரும் தானே. ஒரு கண்டுபிடிப்பு மும்முனை தாக்குதல் தொடுத்து பலவற்றை வீழ்த்தியது உண்மை என்பதால் இந்தக் கவிதைக்கு இந்த  முக்கோண வடிவம் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.  




#வட்டக் கவிதை

சட்டங்களில் உள்ள ஓட்டைகள், சட்டம் படித்தவர்களை விட குற்றவாளிகளே அதிகம் காண்கின்றனர். அவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அவ்வாறான ஓட்டைகள், ஓட்டை எதுவும் இல்லாத கண்களில் இருந்து பொழியும் கண்ணீரினை ஒத்ததாகவே இருக்கிறது அல்லவா, அதாவது  சமூகக் கண்களை கண்ணீரில் நனைய வைப்பவர்கள் தானே இவர்கள்!!




#இதயக் கவிதை 


இதயத்துக்குள் தெய்வம் இருக்கும் என்பார்கள். ஐம்பூதங்களின் இதயம் என்பது எது என்ற எண்ணத்தில் எழுந்தது இந்தக் கவிதை 




#சதுரக் கவிதை

இயற்கைப் பொருட்கள் யாவும் தன்னை மறுபடி மறுபடி புதிப்பித்துக் கொண்டு  மேலும் மேலும் வளர்கிறது. மனிதன் மட்டுமே ஏதோ ஒன்றை வேண்டி வீழ்ச்சிப் பாதையை தேர்ந்தெடுக்கிறான். தவறான பழக்கவழக்கம், நோய், பேராசை, கோபம் என்று அவனைப் பற்றுவது எல்லாமே தாழ்வான பொருட்கள் அல்லவா!!


#தோற்றக் கவிதை 

நமக்கு நன்மையாக அமையும் ஒன்று, மற்றவர்களுக்கும் அதே போன்று அமைவதில்லை. அடுத்தவரைப் பற்றிய சிந்தனை நமக்கும் வாய்க்க வேண்டும் என்றால் அவர்களுடைய பக்கத்தில் இருந்தும் அந்த விஷயத்தைப்  பார்க்க வேண்டும். Walk a mile in my shoes என்பார்கள் ஆங்கிலத்தில். அப்படி செய்ய ஆரம்பித்தால் மனிதர்களிடையே பிரச்சனைகள்  வருவதற்கு வாய்ப்பேயில்லை.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக