ஞாயிறு, ஜனவரி 11, 2026

உன்னதம் - கவிதை



தலைப்பு: உன்னதம்

பூமியிடம்
வேகம் கற்றுத்தரக் கேட்டேன்
வானிடம்
எல்லைக்குள் வாழும் முறைமை கேட்டேன்
காற்றிடம்
சரித்திரத்தில் தடம் பதிக்கும் மந்திரம் கேட்டேன்
நெருப்பிடம்
வாழ்விக்கும் வழிமுறைக் கேட்டேன்
நீரிடம்
ஓய்வின் உன்னதம் கேட்டேன்
யாரிடம்
எதைக் கேட்பதெனத்
தெரியாதா என்றது கவிதை
இருளின் சிறப்பை
ஒளியே அதிகம் அறியுமென்றேன்
இப்போது கவிதை
சிந்திக்கத் தொடங்கிவிட்டது