வியாழன், ஜனவரி 22, 2026

தேசாந்திரி - கவிதை


 கூட்டம் முண்டியடிக்கும் பேருந்துகள்
புகை கக்கும் வாகனங்கள் 
குண்டு குழியான சாலைகள் 
அவசரமாய் விரையும் மனிதர்கள் 
சாலையோரங்களில் கடைவிரிக்கும் சிறு வியாபாரிகள் 
விளக்குகள் மின்னும் பெரும் அங்காடிகள் 
தென்னை, மா, வாழை மரங்கள் வளர்க்கும் வீடுகள் 
குரைக்கும் நாய்கள் 
சுடும் வெயில் 
திடீரென்று பொழியும் மழை 
திட்டும் முதலாளி 
வேலை பார்க்கும் தொழிலாளி 
துரோகம் வஞ்சகம் கபடம் 
வாஞ்சை நம்பிக்கை அன்பு
நிறைந்த மனிதர்கள்
இப்படியாக எல்லா ஊரும் ஒன்று தான்
இத்தகைய ஊர்களைக் கொண்ட
எல்லா நாடுகளும்கூட ஒன்றுதான் 
தன்னை மட்டுமே அதிகம் 
நேசிப்பவர்களின் எண்ணிக்கையும்
தன்னைத் தவிர 
யாரோ ஒரு அந்நியனை நேசிப்பவர்களின்
எண்ணிக்கையும் மட்டுமே
ஊருக்கு ஊர் வேறுபடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக