வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை சார்பில் தமிழ் மண் கண்ட மாபெரும் ஆளுமைகள் திரு. கி.ராஜநாராயணன், திரு. கோ. இளவழகனார் மற்றும் முனைவர் திரு.முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கான நினைவுப் புகழஞ்சலி நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.
ஒவ்வொரு மரணமும் நாம் இந்த மனித குலத்திற்கு ஆற்ற வேண்டிய நல்ல செயல்களுக்கு ஆன குறைவான கால அளவையே காட்டுகிறது என்று சொல்லலாம். தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே தாங்கள் எடுத்துக் கொண்ட பணியினை நிறைவாகவும், தன்னைச் சுற்றி உள்ள அனைவரும் பயன்படும் வகையில் செய்வது என்பது எல்லாருக்கும் கை வராத ஒன்று. அந்த வகையில் படைப்பு இலக்கியத்தின் தந்தையும், சாஹித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.கி.ரா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணினித் தமிழ் தந்தை என அன்போடு அழைக்கப் படுபவருமான பேராசிரியர் பத்மஸ்ரீ மு. ஆனந்தகிருஷ்ணன், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழுக்காக பணியாற்றிய அனைத்துத் தமிழறிஞர்கள் புத்தகங்களையும் மொத்தமாக வெளியிட்டு தமிழ் தொண்டாற்றிய மூத்த பதிப்பாசிரியர் தமிழ் மண் இளவழகனார் அவர்கள் யாவரும் அரிய சாதனை படைத்தவர்கள்.
இவர்களை இழந்தது என்பது உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் துன்பம் அளிக்கும் ஒரு செய்தி. இவர்கள் விட்டு சென்ற இடம் பெரியது.இவர்கள் விட்டுச் சென்ற பணியினை உலக தமிழர்கள் அனைவரும் சிரமேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்வில் பேசிய அனைவரின் கருத்தாக இருந்தது. இந்த பெரிய தமிழ் ஆளுமைகளின் அருஞ்செயல்கள், அவர்களின் மனிதநேயம், அவர்களின் தொலைநோக்குப் பார்வை ஆகிய பல விஷயங்களைப் பற்றி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்வின் காணொளி இணைப்பு கீழே.
தொகுப்பு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்கு