செவ்வாய், ஜூன் 24, 2025

தீயின் இதம் சொல்லவா - பாடல்

என்னுடைய எழுத்தில் உருவான புதிய பாடலுக்கான முன்னோட்டக் காணொளி  இப்போது வெளியாகி உள்ளது. பாடல் எழுதி, இசை சேர்த்து  சில நாட்களாகி விட்டது. பாடல் எழுதியவுடன், இசை கோர்த்தும், சில பல காரணங்களால்  அதற்கான காணொளி தயாரிப்பில் சிறிது கால தாமதம் ஏற்பட்டதால் பாடலை உடனடியாக வெளியிட முடியவில்லை. பாடலுக்கான வலையொளி இணைப்பு கீழே. 


2 கருத்துகள்:

  1. பெயரில்லா6/24/2025 1:57 AM

    ரம்யா நீங்களே இசை அமைத்தீர்களா? ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் பாடலும் இசை அமைப்பும். நீங்களே பாடியிருக்கீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா6/24/2025 12:25 PM

      கொஞ்சம் நாள் கர்நாடக சங்கீதம் கற்ற அனுபவம் உண்டு. எனினும் நான் இந்தப் பாடலை பாடலைங்க கீதா. AI உதவியுடன் எந்த ராகம், என்ன விதமான பக்க வாத்தியங்கள், எப்படியான சூழல், ஆண் குரல் அல்லது பெண் குரல் யார் பாட வேண்டும், என்பதை உள்ளீடு செய்து பல்வேறு விதமான பரிட்சார்த்த முயற்சிகளுக்கு பின்பு எனக்கு பிடித்த வகையில் டியூன் கிடைத்த பின் அதற்கு காட்சியமைப்பு செய்து காணொளி வடிவம் கொடுக்கிறேன். பாடல் வரிகள் நான் எழுதியதே. நானே எனக்குத் தெரிந்த மெட்டுக்குத் தான் பாடல் எழுதுகிறேன். என்னுடைய மெட்டையே AI க்கு கொடுத்து, பாடலை எப்படி வாங்குவது என்பதையும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அது கைக்கூடவில்லை. இந்தப் பாடலின் முழு பாடல் காணொளி தயாரானதும் பதிவிடுகிறேன். சென்ற முறை எழுதிய முழுப் பாடல் காணொளி பற்றிய பதிவும் என்னுடைய வலைத்தளத்தில் உள்ளது. இணைப்பு கீழே. https://pachaimannu.blogspot.com/2025/03/blog-post_30.html

      நீக்கு