செவ்வாய், ஜூன் 23, 2026

குடைராட்டினம் - கவிதை



வேலையிழந்தவனிடம் அனைவரும் கேட்பது 

இப்போது என்ன செய்கிறாய்  என்று  

இவர்களுக்கு எப்படிச் சொல்வது 

அவன் இப்போதெல்லாம் 

நழுவும் தருணங்களை

நிதானமாய்க் கடக்கிறான் 

பூக்களோடு முட்களையும் ரசிக்கிறான் 

வலிகளைத் தோல்விகளை 

அவமானங்களை 

எதைக் கொண்டும் மறக்கடிக்காமல் 

எதிர்கொண்டு ஏற்கிறான் 

நேற்றைய சுமைகளோடு  

இன்றைய பொருளாதாரக் சுமையையும்

கலளிப்போடுச்  சுமக்கிறான் 

வெற்றி பெறும் துடிப்பினைக் 

நம்பிக்கை ஊற்றி வளர்க்கிறான் 

அவன் கனவுகளை இன்னும் 

அதிகமாக நேசிக்கத் தொடங்கியுள்ளான்

 எல்லா நாட்களையும் சரிசமமாக

எதிர்கொள்ளப் பழகியுள்ளான்

குடைராட்டினத்தில் சுற்றுபவர்களிடம் 

பூமியின் அதிராத மென்சுழற்சியை

எப்படி விவரிப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக