திங்கள், ஆகஸ்ட் 09, 2021

சார்லட் புத்தகக் கண்காட்சி


தமிழை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த ஒன்று தமிழ் வாசிப்பு. இதற்கு முதல் தேவை தமிழ்ப் புத்தகங்கள். அயலகத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல தமிழ் புத்தகங்கள் ஒருங்கே கிடைக்கும் வாய்ப்பு மிகவும் அரிதான ஒன்று. இந்தக் குறையைக் களையும் பொருட்டு அமெரிக்காவிலேயே முதல் முதலாக பெண்களே நடத்தும் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்து வருகிறது. இந்த நிகழ்வு சார்லட்டில் வரும் ஆகஸ்ட் 14,2021 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்க இருக்கிறது.

இந்நிகழ்வில் மருத்துவர் அம்பிகாதேவி நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவரின் நூல்களும் வெளியிடப்படும். அது மட்டும் அல்லாமல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் துவக்கமும் நடைபெற இருக்கிறது. புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு Raffle பரிசுகளும் உண்டு.

சார்லட் வாழ் தமிழ் நெஞ்சங்கள் மட்டுமன்றி அருகாமையில் உள்ள ஊர்களில் வசிக்கும் நண்பர்களும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

முகக் கவசம் உயிர் கவசம் என்பதால் மாஸ்க் அவசியம். பாதுகாப்பாக புத்தகக் கண்காட்சியை கண்டு பயனடையுங்கள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக