வெகு நாட்களாக இசை கோர்த்து வெளியிட வேண்டும் என்று நினைத்த ஒரு பாடலை இன்று தான் முடிக்க நேர்ந்தது. தற்போது இந்தப் பாடலை வலையொளியில் கேட்கலாம். தீயின் இதம் சொல்லவா என்று தொடங்கும் இந்தப் பாடல் ஒரு காதல் பாடல். பாடலின் பல வரிகள் உயிரோட்டமாகவும், மனதிற்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது. பாடலுக்கான இணைப்பு கீழே.
கலையும் மேகத்தில் காவியம் எழுதினேன்
காகிதக் கப்பலில் காலங்கள் கடக்கிறேன்
கனவிலே தழுவும் கவிதையும் நீதானே
கண்ணிமை நடுவினில் உன்முகம் நிறுத்தினேன்
காதலில் தொலைந்து உன்மத்தம்
கொள்கிறேன்
காலத்தில் நமது பெயரும் நிலைக்காதோ
என்று உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புதமான எனக்குப் பிடித்தமான வரிகள் இப்பாடலில் அமைந்துள்ளது. பாடல் எழுதுவது எளிதாக இருந்தாலும் அதற்குத் தேவையான காட்சியமைப்பு செய்வதற்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் இசையோடு காட்சியமைப்பும் இயல்பாக வந்துள்ளது மகிழ்ச்சியளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக