வியாழன், நவம்பர் 26, 2026

பறை பயிற்சிப் பட்டறை

சார்லட் தமிழ்ச் சங்கமும் ஓங்கு பறைக் குழு என்ற அமைப்பும் இணைந்து சார்லட்டில் மூன்று நாள் பறை பயிற்சிப் பட்டறையை சென்ற வாரம் நடத்தினார்கள். பறைக்  கலைஞர் திரு. சக்தி இராவணன் அவர்கள் இந்த பயிற்சிப் பட்டறையை நடத்தினார்.  முதுகலைப் பட்டதாரியான திரு. சக்தி அவர்கள் பறை பற்றிய ஆழ்ந்த ஞானம் கொண்டவர். தற்போது முனைவர் பட்டப்படிப்பை பறையிசை சார்ந்து மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்குச் சென்று தானே எழுதி வடிவமைத்த பறை பயிற்சி முறைகளை அனைவருக்கும் கற்றுத் தருகிறார். இவருடைய அணுகுமுறை பொறுமை, கற்றுத் தரும் பாங்கு ஆகியன மாணவர்களுக்கு பறைப் பயிற்சியை எளிதாக கொண்டு சேர்ப்பதாக அமைந்தது. பறையுடன் பரதம்,  பாலே, சாக்ஸ், சினிமா பாடல்கள், துடும்பாட்டம், துள்ளல் பறையாட்டம் என்று பல்வேறு புதிய விஷயங்களை இணைத்து அதை அனைவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் கொண்டு சேர்க்கும் இவருடைய பணி போற்றத்தக்கது. நிகழ்வில் இருந்து காணொளியும், படங்களும் கீழே. 













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக