செவ்வாய், மே 18, 2021

முள்ளிவாய்க்கால் நினைவு தின கவிதை


மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு எழுதிய கவிதை. ஈழ சொந்தங்களுக்கு நீதியும் , நன்மையையும் தேடி வரட்டும் என்ற பிரார்த்தனையுடன் பதிவிடுகிறேன்.


புவி துளைத்த எரிகல்லாய்

கொடும் காலனின் கொலைக் களனாய்
பொழியும் அமில மழையாய்
பகலவனை விழுங்கும் கருந்துளையாய்
கொத்துக் குண்டுகள் அடைமழையாய்
குருதி குடித்தனவோர் மேதின நாள்

கண்ணீரில் நிலம் நனைந்து
முள்வேலிக்குப் பின் நம்மினம் அடைந்து
முள்ளிவாய்க்காலில் மனிதம் வீழ்ந்து
முடிந்தது ஆண்டு பன்னிரண்டு

துப்பாக்கி குண்டுகள் கோலேச்சின
தவறாமல் உயிர்மாய்க்கும் கூர்வாளாயின
மனிதம் மதம் தனிந்த பின்
பசித்த பாலகன்
துள்ளித் திரிந்த கோமகள்
 பாடித் திரிந்த புள்ளினங்கள்
கூடித் திரிந்த வண்டினங்கள்
இசைப்பதை முழுதாய் நிறுத்தியது
தரணியாண்ட தமிழினம்
ஆள்வோர் கசக்கியெறிந்த காகிதம்
உணர்வால் இணைந்த நம்சொந்தம்
உயிர்மாய்ந்த செய்தி பெருந்துன்பம்
கண் மதகுடைத்த கண்ணீர் 

புதுக்கடலானது செம்புனலானது

துயரம் வற்றா நெஞ்சுடன்
கசியும் ஈர விழியுடன்
இறந்தோர் நினைவைப் போற்றுவோம்
தமிழர் தியாகம்
பறைசாற்றுவோம்
நீதி வெல்லும் ஓர் தினம்
தமிழர் வெற்றி சொல்லும் சரித்திரம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக