சனி, மே 01, 2021

கவிதை கேளுங்கள்

உலக பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா, ஒரு துளி கவிதை அமைப்பு, புதுச்சேரி, வல்லின சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா, ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள்  இணைந்து பெண் கவிஞர்களுக்கு என்று www.worldpoetess.com என்ற புதிய இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்கள். உலகெங்கும் உள்ள பெண் கவிஞர்களுக்கு ஒரு சிறப்பான இணைப்புப் பாலமாக  செயல்படுவது மட்டுமன்றி பல பெண் கவிஞர்களின் படைப்புகளை உலகெங்கும் உள்ளோரின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் ஒரு தளமாகவும், கவிதைகளை சேகரித்து ஆவணப்படுத்தும் முகமாகவும் அமைந்துள்ளது இந்த இணையதளம். திரு.லோகராஜ் அவர்களின் கைவண்ணத்தில் பெங்களூரை சார்ந்த திரு.வில்பிரட் அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரு. லோகராஜ் அவர்கள் ஒரு பேனா ஒன்றை   ஒரு பெண்ணின் உருவத்துடன் இணைத்து இந்த இணைய தளத்தின் இலச்சினை வடிவமைத்திருந்தார். ஆங்கிலத்தில் Pen என்று எழுதுகோலையும் அதன் மேல் ஒரு பெண் உருவமும் கொண்டு வடிவமைத்திருந்தது சிறப்பு. இந்த இணைய தளத்தை இன்று துவக்கி வைத்து பேசியவர் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை தலைவர் திரு. கால்டுவெல் வேள்நம்பி  அவர்கள். கவிஞர். உமை பற்குணரஞ்சன் அவர்கள் அறிமுகவுரையையும்,  கவிஞர் திரு. அமிர்தகணேசன் அவர்கள் நோக்கவுரையும், கவிஞர் திருமதி. ராஜி ராமசந்திரன் அவர்கள் நன்றியுரையையும் , கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்கள் நிகழ்வினை தொகுத்தும்  அளித்தார்கள். தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி இந்த நிகழ்வினை நேரலையில் ஒளிபரப்பு செய்தது. பெண் கவிஞர்களை வளர்த்தெடுக்கும் நல்லதொரு சிறப்பான முயற்சி. இந்த நிகழ்வினை கீழே உள்ள  வலையொளி தளத்தில் காணலாம். உங்களுக்கு அறிமுகமான பெண் கவிஞர்கள் இருப்பின் www.worldpoetess.com என்ற தளத்தில் அவர்களைப் பதிவு செய்யச் சொல்லுங்கள். அவர்கள் தங்கள் படைப்புகளை (கதை,கவிதை, கட்டுரை, ஓவியம்) இந்த இணைய தளம் வாயிலாக வெளியிடலாம். 

இணையதள இணைப்பு கீழே 

அருநெல்லி 

இந்த நிகழ்வின் ஒளிபரப்பைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.



2 கருத்துகள்:

  1. நல்ல தகவல் ரம்யா.

    ரொம்ப மாதங்களாகிவிட்டது நாங்கள் வலைப்பக்கம் வந்து

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நலமாக உள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் பின்னூட்டத்தை பார்த்து பல நாட்கள் ஆகிறது. நன்றி துளசிதரன்/கீதா.

    பதிலளிநீக்கு