ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 அன்று உலக தாய்மொழி தினத்தைக் கொண்டாடுகிறோம். தமிழ்ச் சமூகம் ஒரு நூறு வருடங்களாக தமிழ் மொழியை, தமிழ் தேசியத்தை கட்டிக் காக்கும் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்றும் கூட நீட் முதல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசாங்கப் பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கம், நவோதயா பள்ளிகள் துவக்குவது, மும்மொழிக் கொள்கை போன்ற பல்வேறு விதங்களில் ஹிந்தி ஆதிக்கம் செலுத்த முனைவதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.இன்னும் ஐம்பது முதல் நூறு ஆண்டுகளில் தமிழ் மொழி சந்திக்கப் போகும் பல இடர்பாடுகளுக்கான முன்னோட்டமாக இதைச் சொல்ல முடியும்.
பேரவை இலக்கியக் குழுவின் இன்றைய கூட்டம் "மொழிப்போர் -நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் நடந்தேறியது. புலவர் செந்தலை ந கௌதமன், திருமதி இறை. பொற்கொடி, திரு ஆழி செந்தில் நாதன் மற்றும் திரு தொல். திருமாவளவன் ஆகியோர் மொழிப்போரின் பல்வேறு பரிமாணத்தை பற்றி எடுத்துரைத்தார்கள். இது ஒரு முக்கியமான உரை. அனைவரும் அறிந்து, மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், தமிழ் என்ற பெரிய குடையின் கீழ் இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவை அனைவரும் கேட்பது மட்டுமன்றி உங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பற்றி சொல்லுங்கள். வலையொளி இணைப்பு கீழே.
தமிழால் ஒன்றிணைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக