புத்தகக் கண்காட்சி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சென்னை புத்தகக் கண்காட்சி தான். வெளிநாடுகளில் அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் புத்தகக் கண்காட்சி என்பதெல்லாம் கனவு தான். தொலைக்காட்சியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். அதுவும் புதிய புத்தகங்கள் வெளியீடு என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயம். இதெல்லாம் அமெரிக்காவில் அதுவும் எங்கள் ஊரிலேயே நடந்தது என்பது இன்றும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. புத்தகங்களை வாங்க பெருமளவில் கூட்டம் வந்ததும், நிறைய புத்தக ஆர்வலர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர் என்பதெல்லாம் எங்கள் ஊரில் நடந்தேறிய புத்தகக் கண்காட்சியின் சிறப்புகள் என்று சொல்லலாம்.
கண்காட்சியை தொடங்கி வைத்த சார்லட் வாழ் சிறப்பு விருந்தினர்களை மேலே உள்ள படத்தில் காணலாம்.
கண்காட்சிக்கு செய்யப்பட்ட புகைப்பட உதவி கையட்டைகள்
புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே புத்தகங்களை கேரி, வட கரோலைனா சென்று புத்தகங்களை எடுத்து வந்தோம். வெயிலில் போய்விட்டு வந்ததால் களைப்பாக இருந்தாலும் பெட்டி நிறைய புத்தகங்களைப் பார்த்ததும் வடிந்திருந்த உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொண்டது. அது தவிர அடுத்த வாரத்திலேயே புதிய புத்தகங்களும் வந்து சேர்ந்தது. புத்தகங்களின் எண்ணிக்கையை சரி பார்ப்பது, புத்தகங்களை வகைமைப் படுத்துவது என்று பயங்கர வேலை. அது மட்டும் அல்லாமல் நிறைய புது புத்தகங்களும் வந்து குவிந்தன. அவற்றையும் சரி பார்ப்பது, கணினியில் உள்ளிடுவது, புத்தகங்களுக்கு விலை பட்டி ஓட்டுவது என்று வேலை அதிகம். நான்கு பேர் இணைந்து செய்துமே கடைசி இரண்டு நாட்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்வதாக இருந்தது. தன்னார்வலர்களுக்கு என்ன வேலை என்று பிரித்து கொடுப்பது, அவர்களுக்கு உரிய தகவல் அளிப்பது என்று கடைசி தினம் பரபரப்புடன் சென்றது. தன்னார்வலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது, புத்தக கண்காட்சிக்கு வந்த விருந்தினரை கவனிப்பது என்று பணிகள் மிக அதிகம். ஆனால் கண்காட்சி மிகச் சிறப்பாக நடந்தது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. நிறைய குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கி சென்றர்கள். ஒரு புதிய தொடக்கமாக இந்த கண்காட்சி அமைந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.
புத்தக கண்காட்சி நேரலையில் இங்கே:
வல்லினச் சிறகுகள் இதழில் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய முழு விவரம். பக்கம் 86 இல்
தினமலரில் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வந்த செய்தி.
புத்தகக் கண்காட்சியை பற்றிய வீடியோ பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக